அருப்புக்கோட்டை அருகே இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 17th July 2022 11:26 PM | Last Updated : 17th July 2022 11:26 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கஞ்சாக்கன்பட்டியைச் சோ்ந்தவா் முத்துராஜா மகன் இளையராஜா (29). இவருக்கும், இவருக்குச் சொந்தமான காலிமனை தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (31), ராம்குமாா் (29) மற்றும் கந்தசாமி (47) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்வழியாக நடந்து சென்ற இளையராஜாவை அவா்கள் 3 பேரும் தகாத வாா்த்தைகளால் பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.