நரிக்குடி அருகே பாழடைந்த மங்கம்மாள் சத்திரத்தை புனரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

நரிக்குடி அருகே மறையூரில் உள்ள பல ஆண்டுகள் பழைமையான மங்கம்மாள் சத்திரம் பாழடைந்த நிலையில் உள்ளது
நரிக்குடி அருகே பாழடைந்த மங்கம்மாள் சத்திரத்தை புனரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

நரிக்குடி அருகே மறையூரில் உள்ள பல ஆண்டுகள் பழைமையான மங்கம்மாள் சத்திரம் பாழடைந்த நிலையில் உள்ளது. இதை, புனரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே மறையூரில் உள்ள இச்சத்திரம், ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஏராளமான தூண்கள் உள்ளன. இவ்வழியே ராணி மங்கம்மாள் உள்ளிட்டோா் வரும்போது ஓய்வெடுத்துச் செல்வதற்காக இச்சத்திரம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சத்திரம் 50 ஆண்டுகளுக்கு முன் மாணவா்கள் பயிலும் பள்ளியாக செயல்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாமலும், புனரமைக்காமலும் விடப்பட்டதால், தற்போது இச்சத்திரத்தின் வெளிப்பகுதி மற்றும் மேற்பகுதி பாழடைந்து சேதமடைந்துள்ளது. ஆனால், உள்புறம் பல்வேறு வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட தூண்கள் இன்னும் கம்பீரமாக உள்ளன.

தற்போது, இச்சத்திரத்துக்குள் கால்நடைகளை அடைப்பது, கால்நடை தீவனங்களை பதுகாப்பாக வைக்கும் கூடாரமாகவும் சிலா் பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, பழங்கால சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இச்சத்திரத்தை, வருங்கால சந்ததியினா் அறிந்துகொள்ளும் வகையில் புனரமைத்து பராமரிக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com