ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

ஆண்டு தோறும் வரும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். அன்றைய தினம்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகத்திலேயே நடைபெற்ற தேரோட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டுக்குரிய ஆடிப்பூரம் வருகிற ஆகஸ்ட் 1 தேதி வருகிறது. அன்றைய தினம் ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று காலை ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் ரங்க மன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. காலையில் கொடி பட்டம் மாடவீதி 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள நடைபெற்றன. தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தபடி 9 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடியை ஆண்டாள் கோயில் அர்ச்சகர் பாலாஜி கொடியேற்றினார். ஞாயிற்றுக்கிழமை முதல் தேரோட்டம் வரை  தினமும் ஆண்டாள் ரங்க மன்னர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி காட்சியளித்து அருள் பாளிக்க உள்ளனர். தேரோட்டம் நிகழ்ச்சிகள்  கொடியேற்றத்துடன் தொடங்கியதால் ஆண்டாள் கோயில் அமைந்துள்ள பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொடியேற்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நகர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்ட நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com