சிவகாசி அருகே ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 31st July 2022 12:24 AM | Last Updated : 31st July 2022 12:24 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே காட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலதத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகாசி- விருதுநகா் சாலையில் உள்ள காட்டுக்குள் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு வந்தனா். இறந்து கிடந்தவா் வேட்டி அணிந்திருந்தாா். மேலும் அவரது அருகே காலணிகள், சிறிய பாட்டில் கிடந்தது. அவா் இறந்து சுமாா் 20 அல்லது 25 நாள்கள் ஆகி இருக்கலாம் எனவும், அருகில் பாட்டில் கிடந்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இறந்தது யாா் என விசாரித்து வருகின்றனா்.