அருப்புக்கோட்டையில் நூலகம், அறிவுசார் மைய அடிக்கல் நாட்டுவிழா
By DIN | Published On : 31st July 2022 04:48 PM | Last Updated : 31st July 2022 04:48 PM | அ+அ அ- |

அருப்புக்கோட்டையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நூலகம் மற்றும் அறிவுசார்மைய அடிக்கல் நாட்டுவிழா.
அருப்புக்கோட்டையில் நூலகம் மற்றும் அறிவுசார்மையத்தின் அடிக்கல் நாட்டு விழா பூமிபூஜையுடன் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பில் சுமார் ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையக்கட்டடம் அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
நகர் மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ரமேஷ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பூமிபூஜையுடன் வாஸ்து கம்பு நடப்பட்டது. தொடர்ந்து விழாவில் அமைச்சர் இராமச்சந்திரன் பேசியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, போட்டித்தேர்வுகளுக்கு இலவசப்பயிற்சி மையமாகவும், அத்தேர்வுகளுக்கு தயாராகிட படிப்பு மையமாகவும் செயல்படும் விதமாக சுமார் ரூ1.5 கோடி மதிப்பீட்டில், 4,500 சதுர அடி பரப்பளவில் கீழ்த்தளத்தில் நூலகமும், மேல்தளத்தில் அறிவுசார் மையமும் (போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படிப்பு மையம்) அமைத்திட இன்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இதையும் படிக்க- சிவசேனை எம்.பி. மும்பையில் கைது, அமலாக்கத் துறை அதிரடி
இந்த நல்வாய்ப்பினை போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன் என அவர் தெரிவித்தார். உடன் நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜோதிராமலிங்கம், நாகநாதன் உள்ளிட்டோரும், மாவட்ட முகமை ஒப்பந்ததாரர் சுந்தர் பாண்டியன் உள்ளிட்ட திமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும்,திரளான தொண்டர்களும் நேரில் கலந்துகொண்டனர்.