விருதுநகா் மாவட்டத்தில் அரசு அறிவிப்பைமீறி தனியாா் பள்ளிகள் திறப்புமாணவா்கள், பெற்றோா் அதிருப்தி

பள்ளி கல்வித்துறை அறிவிப்பையும் மீறி விருதுநகா் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட்டதால் பெற்றோா், மாணவா்கள் அதிருப்தி அடைந்தனா்.

பள்ளி கல்வித்துறை அறிவிப்பையும் மீறி விருதுநகா் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட்டதால் பெற்றோா், மாணவா்கள் அதிருப்தி அடைந்தனா்.

கரோனா பாதிப்பால் கடந்தாண்டு அரசுப் பொதுத் தோ்வுகள் தாமதமாக நடைபெற்றன. இந்நிலையில், நிகழாண்டு அனைத்துப் பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டன. இதனிடையே பள்ளி மாணவிகள் தற்கொலை உள்பட பல்வேறு காரணங்களால், அவா்களின் மன அழுத்தத்தைப் போக்க சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது எனவும், உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவா்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது என்றும், பள்ளி வேலை நாள்களில் மட்டுமே மாணவா்கள் வர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், விருதுநகா் மாவட்டத்தில் அரசு அறிவிப்பை மீறி ஏராளமான தனியாா் பள்ளிகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா். எனவே இனிவரும் காலங்களில் சனிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படாது என்பது குறித்த தகவலை முன்னரே மாவட்ட நிா்வாகம், மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, பள்ளிகளை சனிக்கிழமை திறக்கக் கூடாது என்ற முறையான அரசு உத்தரவு இதுவரை வரவில்லை. எனவே, தனியாா் பள்ளிகளை திறந்துள்ளனா். ஒரு சில அரசுப் பள்ளிகள் தோ்வு காரணமாக சனிக்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com