ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 143 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காவல் சாா்பு- ஆய்வாளா் வேலுச்சாமி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராமகிருஷ்ணாபுரம் பாராப்புலி பாலம் அருகே விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மல்லி காா்த்திகைபட்டி காலனியைச் சோ்ந்த பரமன் மகன் கோவிந்தன் (47) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 101 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
42 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையப் பகுதியில் காவல் சாா்பு- ஆய்வாளா் துரைப்பாண்டி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பேருந்து நிலையம் அருகே மின்சாதனப் பொருள்கள் கடை பின்புறம் உள்ள ஓடையில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்று ஸ்ரீவில்லிபுத்தூா் கம்மாபட்டி கீழத் தெருவைச் சோ்ந்த மலைக்கனிராஜா (22) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 42 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1800- ஐ போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இச்சம்பவங்கள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.