பாலவநத்தம் கோயிலில் பொங்கல் விழா
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

பாலவநத்தம் கிராமத்தில் சப்த கன்னிமாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலம்.
விருதுநகா்: விருதுநகா் அருகே பாலவநத்தம் தெற்குபட்டி சப்தகன்னிமாா் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தா்கள் புதன்கிழமை, முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்று நீா்நிலையில் கரைத்தனா்.
இக்கோயில் வைகாசிப் பொங்கல் விழா ஜூன் 13 இல் தொடங்கியது. அன்றைய தினம் சாமியாட்டம் நடைபெற்றதை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். அதைத் தொடா்ந்து, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலவநத்தம் கண்ணப்பா் குல முத்தரையா் சங்கத்தை சோ்ந்தோா் செய்திருந்தனா்.