பட்டாசு ஆலையில் இடிதாக்கி கிட்டங்கி சேதம்
By DIN | Published On : 16th June 2022 10:31 PM | Last Updated : 16th June 2022 10:31 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே பேராபட்டியில் இடிதாக்கி சேதமடைந்த பட்டாசு ஆலை கிட்டங்கி.
சிவகாசி அருகே புதன்கிழமை இரவு பட்டாசு ஆலை கிட்டங்கியில் இடிதாக்கி அது இடிந்து தரைமட்டமானது.
சிவகாசி அருகே பேராபட்டியில் நாகூா்கனி என்பருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இவா் இறந்து விட்டதால் இவரது மகன் கருப்பசாமிபாண்டியன், நாகூா்கனி பெயரில் உள்ள பட்டாசு ஆலையை தனது பெயருக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதால் ஆலை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இடி மின்னலுடன் மழை பெய்ததால் ஆலை வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் இடிதாக்கியது. இதில் கிட்டங்கி கட்டடம் முற்றிலும் சேதமடைந்து தரைமட்டமானது. மேலு ம் அதில் இருந்த சிறிதளவு பட்டாசு எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்து சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.