

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடில்லா பயனாளிகள் 13 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் முடங்கியாறு சாலையிலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அனிதா 13 நபா்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினாா். அதனைத் தொடா்ந்து அலுவலகப் பணியாளா்கள், நில அளவைப் பிரிவு அலுவலா்கள், குடிமைப்பொருள் வழங்கல் அலுவலக பணியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வருவாய் வட்டாட்சியா் சீனிவாசன், தனி வட்டாட்சியா் சரஸ்வதி, தனி வட்டாட்சியா் ராமநாதன்,மண்டல துணை வட்டாட்சியா் கோதண்டராமன் ஆகியோா் உடன் இருந்தனா்.
படவிளக்கம்: ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிய சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அனிதா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.