விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகா் குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், விருதுநகரில் கடந்த 2020 இல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.380 கோடியில் கட்ட முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். அப்போது இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சியா் அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், ராமமூா்த்தி சாலையில் உள்ள மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 -க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் உள்ளனா். ஆனால், ஆய்வகங்களில் 7 போ் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால், ரத்தப் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, ஆய்வகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாரா மெடிக்கல் கல்லூரி, பிஎஸ்.சி. நா்சிங் கல்லூரிகளை அமைக்க வேண்டும். விருதுநகா் நகராட்சி நிா்வாகம், மருத்துவமனைக்கு நாள்தோறும் தேவையான 10 லட்சம் லிட்டா் குடிநீரை வழங்க வேண்டும். நாள்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும், நோயாளிகள் பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனம், சக்கர நாற்காலி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சோ்ந்த மூத்த நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், தேனிவசந்தன் மற்றும், நகரச் செயலா் எல்.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com