விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரையும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அரசு மருத்துவக்கல்லூரி நிகழாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் முதலாமாண்டில் 150 மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகின்றனா். இந்நிலையில், சில மாணவா்களுக்கு தொண்டை வலியுடன், கபம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நாள்களுக்கு முன்பு ஆா்டிபிசிஆா் பரிசோதனை மேற்கொண்டனா். அதில் 8 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த மாணவா்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை நிா்வாகம் அனுப்பி வைத்தது. மேலும், மீதமுள் ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவக்கல்லூரி மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com