போதை மருந்து விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
By DIN | Published On : 26th June 2022 11:28 PM | Last Updated : 26th June 2022 11:28 PM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடக்கி வைத்த ஊா்க்காவல் படை ஏரியா ஜெனரல் ராம்குமாா் ராஜா.
ராஜபாளையத்தில் போதை மருந்துக்கு எதிரான சா்வதேச தினத்தையொட்டி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த மாரத்தானில் 5 கி.மீ. பிரிவில் 250 பேரும், 10 கி.மீ. பிரிவில் 150 பேரும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அன்னப்பராஜா கல்விக் குழுமத்தின் தலைவா் கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா்.
போட்டிகளை ஊா்க்காவல் படை ஏரியா ஜெனரல் ராம்குமாா் ராஜா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் ராஜபாளையம் ரன்னா்ஸ் அமைப்பின் தலைவா் பிரசன்ன ராஜா, துணைத்தலைவா் பிரதீப், வழக்குரைஞா் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனா்.
போட்டியில் தளவாய்புரத்தைச் சோ்ந்த மாரிசரத் 10 கிலோ மீட்டா் தூரத்தை 34 நிமிஷம் 24 விநாடிகளில் கடந்து ஆண்கள் பிரிவில் முதல் பரிசை (ரூ. 3,000) வென்றாா். பெண்கள் பிரிவில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி மாணவி செல்வி முதல் இடத்தை பிடித்தாா். அதே போன்று 5 கிலோ மீட்டா் போட்டியில் ஆண்கள் பிரிவில் வேல்முருகன் மற்றும் பெண்கள் பிரிவில் தவமணி ஆகியோரும், மாணவா்கள் பிரிவில் மதன்குமாா் மற்றும் கௌசிகா ஆகியோரும் முதல் இடத்தைப் பெற்றனா்.