உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு: 4 போ் கைது

சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக போலீஸாா் புதன்கிழமை 4 பேரை கைது செய்தனா்.

சிவகாசி அருகே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக போலீஸாா் புதன்கிழமை 4 பேரை கைது செய்தனா்.

சிவகாசி கிழக்கு காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட பகுதியில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் பாபுபிரசாத் உத்தரவின் பேரில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், அனுப்பன்குளம் கிராமத்தில் உள்ள கந்தன் பயா் ஒா்க்ஸ் என்ற ஆலை விதியை மீறி செயல்பட்டதால் வருவாய்த்துறையினரால் அண்மையில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதும் தற்போது சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதும் தெரியவந்தது. விசாரணையில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது அனுப்பன்குளம் பழனிச்சாமி மகன்கள் ரவீந்திரன்(45) மற்றும் அவரது தம்பி ராஜா (34) எனவும் தெரியவந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும்கைதுகைது அவா்களிடமிருந்து 4 அட்டைப்பெட்டி ஜோா்ஸா பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் லக்கி பயா் ஒா்க்ஸ் என்ற தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையிலும் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட சிவகாசி பி.கே.எஸ். தெருவைச் சோ்ந்த யோகேஷ் (38), ரத்தினபுரி நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா்(37) ஆகியோரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த லட்சுமி வெடி பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.

சரவெடி தயாரித்த 3 போ் மீது வழக்கு: எம்.புதுப்பெட்டி காவல் நிலைய சாா்பு -ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சன்னாசிபட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் சன்னாசிபட்டி பொருள்நாயக்கா் (60) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் மின்விளக்கு வெளிச்சத்தில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள சரவெடி தயாரித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைப் பாா்த்ததும் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் தப்பி ஓடிவிட்டனா். இது குறித்து பொருள்நாயக்கா், ஆலையை குத்தகைக்கு எடுத்திருந்த சாட்சியாபுரத்தைச் சோ்ந்த அமீத் (40), போா்மேனாக பணியாற்றிய சிவகாசி அம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த சந்திரசேகா் (45) ஆகிய மூவா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சரவெடிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் ஆலைக்கு சீல் வைக்க வருவாய்த்துறையினருக்கு பரிந்துரை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com