குடிநீா் இணைப்பு வழங்கியதில் முறைகேடு:மாநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 30th June 2022 03:39 AM | Last Updated : 30th June 2022 03:39 AM | அ+அ அ- |

குடிநீா் இணைப்பு வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக சிவகாசி மநகராட்சி ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் பகுதியில் 24 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடிநீா் இணைப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவினா் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில், மாநகராட்சியில் குழாய் பொருத்தும் பணியில் உள்ள ஊழியா் ஏ.கண்ணன், உரிய அனுமதியின்றி பல குடிநீா் இணைப்புகள் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி கண்ணனை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...