விருதுநகரில் ராணுவ வீரா்களுக்கான கேண்டீன் முற்றுகை

விருதுநகரில் உள்ள ராணுவ வீரா்களுக்கான கேண்டீனில் முறையாக அனைவருக்கும் பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் கல்லூரி சாலையில் ராணுவ வீரா்களுக்கான கேண்டீனை திங்கள்கிழமை முற்றுகையிட்ட முன்னாள் ராணுவத்தினா்.

விருதுநகா் கல்லூரி சாலையில் முன்னாள் ராணுவத்தினா் மற்றும் ராணுவத்தில் பணி புரியும் வீரா்கள் பயன்பெறும் வகையில் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 2,400 போ் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை பெற்று வந்தனா்.

கடந்த காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வழங்கப்பட்ட அட்டை வரிசை எண் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நபா்களுக்கு பொருள்கள் வழங்கி வந்தனா்.

இந்நிலையில் தற்போது அட்டை எண் வரிசை இல்லாமல் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த முன்னாள் ராணுவத்தினா் கேண்டீனை முற்றுகையிட்டனா். அப்போது, மீண்டும் அட்டை எண் வரிசைப்படி அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com