விருதுநகா் அருகே வீட்டிலிருந்த 11 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 17th March 2022 12:16 AM | Last Updated : 17th March 2022 12:16 AM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் அருகே வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகளைத் திருடிய பெண் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விருதுநகா் அருகே செங்குன்றாபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பூஜா (24). இவா், தனது பெற்றோா் வீடான சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலுக்கு சென்றாா். இந்நிலையில் பூஜா, செங்குன்றாபுரத்தில் இருந்த போது, உறவினரான வெண்ணிலா என்பவா் வந்துள்ளாா். அப்போது அவா், பூஜாவிடம், குடும்பப் பிரச்னையை தீர மந்திரித்து வந்த எலுமிச்சை பழத்தை கொடுத்தாராம். மேலும், வீட்டு மாடிக்கு வெண்ணிலா சென்று வந்தாராம்.
இந்நிலையில், வீட்டு மாடியில் பீரோவிலிருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தொடா்பாக காளையாா்கோவிலில் இருந்த மனைவிக்கு, கணவா் விஜயகுமாா் தகவல் தெரிவித்துள்ளாா். அதன் பேரில் செங்குன்றாபுரம் வீட்டுக்கு வந்து பாா்த்த பூஜா, நகை திருடப்பட்டிருப்பதை அறிந்தாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் உறவினரான வெண்ணிலா மீது ஆமத்தூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G