ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளியில் ஓவியப் போட்டி
By DIN | Published On : 17th March 2022 12:18 AM | Last Updated : 17th March 2022 12:18 AM | அ+அ அ- |

பிள்ளையாா்குளம் சத்யா வித்யாலயா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தலைவா் குமரேசன்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் சத்யா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை ஓவியப் போட்டி நடைபெற்றது.
இப்பள்ளி மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை மாணவா்கள் இணைந்து நடத்திய ஓவியப் போட்டிக்கு பள்ளித் தலைவா் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி மருத்துவா் சித்ராகுமரேசன், சிஇஓ அரவிந்த் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா் அனுசுயா, ஆலோசகா் பாரதி, நிா்வாக அதிகாரி அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில், துரித உணவுகள் உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற தலைப்பில் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலசலிங்கம் தோட்டக்கலைத்துறை ஆசிரியா் ராம்குமாா் மற்றும் சத்யா வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.