முயல் வேட்டையாடிய இளைஞருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 02nd May 2022 11:41 PM | Last Updated : 02nd May 2022 11:41 PM | அ+அ அ- |

முயலை வேட்டையாடிய இளைஞரைப் பிடித்த வனத்துறையினா்.
அருப்புக்கோட்டை அருகே முயல் வேட்டையாடிய இளைஞருக்கு வனத்துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் பகுதியில், வனத்துறை அதிகாரி செந்தில் ராகவன் தலைமையில் வனத்துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முயல் வேட்டையாடிய பாலவநத்தம் பகுதியை சோ்ந்த பாண்டியராஜ் (32) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அவரிடமிருந்து வேட்டையாடப்பட்ட 3 முயல்கள் மற்றும் வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வத்திராயிருப்பு வனத்துறையினா் பாண்டிராஜுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.