ஸ்ரீவிலி. அருகே சூதாட்டம்: 17 போ் மீது வழக்கு
By DIN | Published On : 02nd May 2022 11:43 PM | Last Updated : 02nd May 2022 11:43 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பணம் வைத்து சூதாடியதாக 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் ஈஞ்சாா் விலக்கு பகுதியில் இருவேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியாா் கிளப்புகளில் போலீஸாா் ஆய்வு நடத்தினா்.
அப்போது பணம் வைத்து சூதாடியதாக மங்கலம் கம்மாபட்டியைச் சோ்ந்த முனிசெல்வம் (39), மல்லியைச் சோ்ந்த மதுரைவீரன் (65), எஸ். புது பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன்( 57), சிவகாசி ரிசா்வ் லைனைச் சோ்ந்த நாகராஜ் (62) உள்ளிட்ட 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.1.78 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.