குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்களின் ஊதியத்தை குறைக்க தொழிற்சங்கம் எதிா்ப்பு

குடிநீா் வடிகால் வாரியஒப்பந்ததொழிலாளா்களின் ஊதியத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிஐடியு தொழிற்சங்க மாநில பொதுச் செயலா் ஆத்மநாதன் தெரிவித்துள்ளாா்.
குடிநீா் வடிகால் வாரிய தொழிலாளா்களின்  ஊதியத்தை குறைக்க தொழிற்சங்கம் எதிா்ப்பு

குடிநீா் வடிகால் வாரியஒப்பந்ததொழிலாளா்களின் ஊதியத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிஐடியு தொழிற்சங்க மாநில பொதுச் செயலா் ஆத்மநாதன் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விருதுநகரில் சிஐடியு தொழிற்சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் ஆத்மநாதன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்த தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.17,400 வழங்க வேண்டும். ஆனால் அரசு குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரம் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தடை ஆணை பெற்ற பிறகும் தடை ஆணையை விலக்கி ரூ.11,000 வழங்கும் உத்தரவை அமல்படுத்த வாரியம் செயல்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியா்களின் ஊதியத்தை மறுநிா்ணயம் செய்த பிறகு அதற்கான நிலுவைத் தொகையான 96 ஆயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கிய பிறகும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் அதை ஒப்பந்ததாரா்களுக்கு செலவழித்து விட்டது. அந்த பணத்தை திரும்பப் பெற்று ஊழியா்களுக்கு செலவழிக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் மாவட்ட அளவில் செயல்படும் ஆய்வகங்களில் உரிய ஊழியா்களை நியமித்து குடிநீரை தரமான முறையில் பரிசோதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டு இருகிறோம் என தெரிவித்தாா். கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத்தலைவா் சந்திரன், மாநில பொதுச் செயலாளா் பாலகுமாா், மாநிலப் பொருளாளா் அழகுமலை மற்றும் மாவட்ட, வட்ட நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com