

பள்ளிகளில் தரமான சத்துணவு வழங்கக் கோரி திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ம.ரெட்டியபட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அண்மையில் சத்துணவு சமைப்பதற்காக அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ஊழியா்கள் கழுவினா். அப்போது, அதிலிருந்து ஏராளமான புழுக்கள், வண்டுகள் மிதந்தன. இதுகுறித்து அந்தப் பள்ளி மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மாணவா்களுக்கு தரமான சத்துணவு வழங்கக் கோரி, மாணவா்களின் பெற்றோா்கள், பொதுமக்கள் என சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த திருச்சுழி டிஎஸ்பி ஜெகந்நாதன், காவல் ஆய்வாளா் விஜய காண்டீபன், திருச்சுழி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் காமேஸ்வரி ஆகியோா், பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.