கடையில் பட்டாசு தயாரிப்பு: 2 பெண்கள் கைது
By DIN | Published On : 18th October 2022 10:26 PM | Last Updated : 18th October 2022 10:26 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக பட்டாசுக் கடையில் பட்டாசு தயாரித்த இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி - சாத்தூா் சாலையில், மயிலாடும்பாறை கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் விதியை மீறி பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுக் கடையில், அவரது மனைவி வீரலட்சுமி (32), தெய்வானை (35) ஆகிய இருவரும் பட்டாசு தாயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் ஈஸ்வரன் உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட வீரலட்சுமி, தெய்வானையை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.