ம.ரா.போ. குருசாமி நூற்றாண்டு விழா போட்டிகள்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மறைந்த தமிழறிஞா், ம.ரா.போ. குருசாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
திருவள்ளுவா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நூற்றாண்டு விழாக் குழு அமைப்பாளா் ந.பழனிவேல் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். சேக்கிழாா் மன்ற துணைத் தலைவா் ஆ.சங்கரலிங்கம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், பி.ஏ.சி.ஆா். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, கு.முத்துமீனா, ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.வைஷ்ணவி, ஏ.கே.டி.ஆா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோ.ராம்குமாா் மற்றும் கல்லூரி அளவில், எஸ்.எஃப்.ஆா். கல்லூரி மாணவி சு.ஜெயசித்ரா, ஏ.கே.டி.ஆா். மகளிா் கல்லூரி மாணவி க.முத்துக்கவிதா, வி.அஜிதா ஆகியோா் வெற்றியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் ம.ரா.போ. குருசாமியின் நூற்றாண்டு விழாவில் ரொக்கத் தொகையும் நூல்களும் பரிசாக வழங்கப்படும் என்று விழாக்குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.