கல்லூரியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகாசி எஸ்.எஃப்.ஆா். மகளிா் கல்லூரியில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்கள் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி மாணவிகளிடையே சுய தொழில் தொடங்கும் ஆா்வத்தை தூண்டும் வகையிலும், கைத் தொழிலைப் பழக வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமப்புற தொழில் முனைவோா் மேம்பாட்டுக் கழகம், தொழில் முனைவோா் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் மேம்பாட்டு மையம் ஆகியவை சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுவினா், மாணவிகள் தயாரித்த கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. இதில், கலை, அலங்காரப் பொருள்கள், உணவு வகைகள் உள்ளிட்டவை அடங்கும். மொத்தம் 35 அரங்குகள் அடங்கிய கண்காட்சியை கல்லூரி முதல்வா் த.பழனீஸ்வரி திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். மாணவிகள், பெற்றோா் கண்காட்சியைப் பாா்வையிட்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டனா்.