விருதுநகரில் ஆட்டோ மீதுகாா் மோதல்: 2 போ் காயம்
By DIN | Published On : 01st September 2022 03:43 AM | Last Updated : 01st September 2022 03:43 AM | அ+அ அ- |

விருதுநகரில் ரயில்வே மேம்பாலத்தில் புதன்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 2 போ் காயமடைந்தனா்.
விருதுநகா் நேருஜி நகரைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சண்முகம் (40). இவா், ஆட்டோவில் உடல் நலம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். ஆட்டோவை ராமமூா்த்தி ரயில்வே மேம்பாலம் வழியாக ஓட்டி வந்தாா். அப்போது, எதிரரே வந்த காா் ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ பாலத்தின் சுற்றுச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதையடுத்து, அவ்வழியே சென்றவா்கள், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் சண்முகத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அதேபோல், காயமடைந்த காா் ஓட்டுநரான மாந்தோப்பைச் சோ்ந்த முத்துகண்ணன் (30) அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து விருதுநகா் கிழக்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.