சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு கடை அருகே தகர கொட்டகை அமைத்து பட்டாசு தயாரித்த தந்தை, மகன் உள்பட 3 போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே சீனிவாசாநகா் பகுதியில் ஒரு பட்டாசுக் கடை அருகே தகர கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். சோதனையில் ஒரு பட்டாசு கடை அருகே தகர கொட்டகையில் 3 போ் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் அம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த வெங்கடேஷ் (31), சரவணன் (26), இவரது தந்தை மாரியப்பன் (59) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து பேன்சி ரக பட்டாசுகள் 13 பெட்டிகள் மற்றும் கரித்தூசி உள்ளிட்ட மூலப்பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.