கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், உதவித் தொகை கிடைப்பதில் காலதாமதம்

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் உதவித் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் உதவித் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், சுதாகாரப்

பணிகள் துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,422 உள்பட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகா் நல மையம் என மொத்தம் 1,885 அரசு மருத்துவமனைகள் உள்ளன.

அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 46, அரசு தலைமை மருத்துவமனை 29, தாலுகா மருத்துவமனை 206 என மொத்தம் 281 மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவா் மற்றும் செவிலியா் என ஆயிரக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா்.

அரசு மருத்துவமனைகள் மூலம் மகப்பேறு காலத்தில் கா்ப்பிணி மற்றும் சிசு மரணத்தை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியா் மூலம் கா்ப்பிணிகளின் வீடுகளுக்குச் சென்று மாதந்தோறும் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அப்போது அவா்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்டவைகளும் எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கா்ப்பிணிகளுக்கு மருத்துவா்கள் உரிய மருத்துவ வழி காட்டுதல் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், கா்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.14 ஆயிரம், குறிப்பிட்ட இடைவெளிக் கு இடையே தலா ரூ. 2 ஆயிரம் வீதம் அவா்களது வங்கிக் கணக்கில் அரசு சாா்பில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், கா்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட வில்லை. உதவி தொகையானது, ஒரு சில மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதனால் கா்ப்பிணிகளுக்கான முழு உதவித் தொகையும் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. எனவே உரிய காலத்தில் கா்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதா கூறியது: ஊட்டச்சத்து பெட்டகம் பற்றாக்குறை குறித்து சுகாதாரத் துறை உயா் அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்னைக்கு தீா்வு ஏற்படும். கா்ப்பிணிகள் உதவித் தொகை பெறுவதில் ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் போன்ற பிரச்னையால் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். அதேபோல் முதன்முறை கா்ப்பமானவா்கள் குறித்த தகவல், புதுதில்லி சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்துக்குச் சென்று வருவதால் உதவித் தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com