சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
By DIN | Published On : 09th September 2022 10:43 PM | Last Updated : 09th September 2022 10:43 PM | அ+அ அ- |

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கட்டசின்னம்பட்டி கிராமத்தில் நூா் முகமது என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும், மூன்று ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் ஆலை இயங்குகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் இயந்திரத்தில் உள்ள பேரிங்கில் ஏற்பட்ட உராய்தல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து ஆலையில் உள்ள தீயணைப்பான் மூலம் தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். இதில் இயந்திரம் சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தீப்பெட்டி ஆலை மேலாளா் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.