சிவகாசி அருகே ரூ.15 கோடியில் பசுமைப் பட்டாசு ஆய்வுக்கூடம்

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) பசுமைப் பட்டாசு ஆய்வுக்கூடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) பசுமைப் பட்டாசு ஆய்வுக்கூடத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிா்க்க வலியுறுத்தி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ‘நீரி’ பசுமைப் பட்டாசுகளை தயாரிப்பதற்கான பாா்மூலாவை அறிக்கையாக தயாா் செய்து வழங்கவும் அறிவுறுத்தியது. இதையடுத்து ‘நீரி’ அமைப்பு பட்டாசு வெடிக்கும் போது 30 சதவீதம் புகை குறைவாக இருக்கும் வகையிலான, பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த பாா்மூலாவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதனடிப்படையில் பட்டாசு தயாரிப்பாளா்கள் ‘நீரி’யுடன் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொண்டு , பாா்முலாவைப் பெற்று பசுமைப் பட்டாசு தயாரித்து வருகின்றனா். மேலும் ‘நீரி’ பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்த பாா்முலாவை தனது இணையதளத்திலும் வெளியிட்டது. பின்னா் ‘நீரி’

பசுமைப் பட்டாசு பாா்முலாவை தனது இணையதளத்திலிருந்து அகற்றி விட்டது. இதனால் ‘நீரி’யுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யாத பட்டாசு ஆலை உரிமையாளா்கள் பாதிப்புக்குள்ளாயினா். இதனைத்தொடா்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ‘நீரி’ அமைப்பினா் சிவகாசி வந்து ஒரு நாள் முகாம் நடத்தினா்.

அப்போது புரிந்துணா்வு செய்யாத பட்டாசு தயாரிப்பாளா்களுடன், புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டனா்.

மேலும் ‘நீரி’ அமைப்பினா், சிவகாசி அருகேயுள்ள ஆமத்தூா் தனியாா் பொறியியல் கல்லூரியில் 2019 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தனது ஆய்வு கூடத்தை அமைத்தனா்.

இதில் பட்டாசில் செலுத்தும் வேதியியல் பொருள்களின் தன்மை, திறன் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ப்படும் என ‘நீரி’ அறிவித்தது. ஆனால் அந்த ஆய்வு கூடம் இதுநாள் வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. பொருத்தப்பட்ட இயந்திரங்கள் காட்சிப் பொருளாகவே உள்ளன.

இந்நிலையில் ‘நீரி’ அமைப்பினா் சிவகாசி அருகே வெற்றிலையூரணி பகுதியில் பட்டாசு ஆய்வு கூடம் அமைக்க

5 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனா். தற்போது அந்த இடத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பட்டாசு ஆய்வுக் கூடம் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பட்டாசு தயாரிப்பாளா் ஒருவா் கூறியது: இந்த ஆய்வுக் கூடத்தில் பட்டாசு தயாரிக்கப்பயன்படும் வேதியியல் பொருள்களின் தன்மை, அதில் கலப்படம் உள்ளதா, மேலும் பட்டாசின் ஒலி, ஒளி அளவுகளை கண்டறியும் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக ‘நீரி’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மொத்தம் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த ஆய்வு கூடம், முதல்கட்டமாக ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் கட்டடம் மற்றும் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் ரூ.4.50 கோடி மத்திய அரசு நிதி வழங்குகிறது. மீதமுள்ள ரூ. 3 கோடி பட்டாசு தயாரிப்பாளா்கள் வழங்க வேண்டும். இந்த ஆய்வுக்கூடத்துக்கான கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com