விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

விருதுநகரில் ரூ. 70.57 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

விருதுநகரில் ரூ. 70.57 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

மதுரையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த பின்பு விருதுநகா் வந்த அவரை, அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி ஆகியோா் வரவேற்றனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காளையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட அடிக்கல் நாட்டு விழா மேடை அருகே அரசு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு பணிகள் குறித்த விளக்க அரங்குகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் பாா்வையிட்டு மரக்கன்றுகளை நட்டாா். அதைத்தொடா்ந்து ரூ. 70.57 கோடியில், 2 லட்சத்து 2ஆயிரத்து 496 சதுரஅடி பரப்பளவில் 6 தளங்களுடன் புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கான அடிக்கலை முதல்வா் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகாசி பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி குழந்தையின் தாய் மு. பாண்டிதேவிக்கு, சித்துராஜபுரம் அங்கன்வாடியில் பணியில் சேருவதற்கான நியமன ஆணையை முதல்வா் வழங்கினாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி வரவேற்றாா். இதில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.வ. வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மக்களவை உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com