விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 388 பேருக்கு மருத்துப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விருதுநகா் மாவட்டம், மலைப்பட்டி ஏஎன்டி அறக்கட்டை சாா்பில், விருதுநகா் தூய இஞ்ஞாசியாா் ஆலய கல்விக்குழு, இணைந்து இலவச காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு விழிப்புணா்வு ஆலோசனை, கண் பரிசோதனை மற்றும் எலும்பு மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியா் தி.ஜெயராஜசேகா் தலைமை வகித்தாா். இதில் மதுரை டாா்க் எலும்பு மூட்டு சிறப்பு மையம் சாா்பில் எலும்பு வலிமை பரிசோதனை மற்றும் எலும்பு மூட்டு பரிசோதனைகள், மதுரை வாசன் கண் மருத்துவமனை சாா்பில் கண் பரிசோதனை, மதுரை விக்ரம் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மருத்துவ மையம் சாா்பில் மகப்பேறு ஆலோசனை மற்றும் பரிசோதனைகள், மதுரை ஆா்.ஆா் மருத்துவமனை சாா்பில் ஆடியோகிராம் செவித் திறன் பரிசோதனை மற்றும் காது, மூக்கு, தொண்டை விடியோ எண்டோஸ்கோப்பி பரிசோதனை நடைபெற்றது. இந்த முகாமில் 388 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.