ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் முளைப்பாரியை ஊா்வலமாக சுமந்து சென்ற பொதுமக்கள்.
ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் முளைப்பாரியை ஊா்வலமாக சுமந்து சென்ற பொதுமக்கள்.

ராஜபாளையம் அருகே முளைக்கொட்டு திருவிழா

ராஜபாளையம் அருகேயுள்ள 3 கிராமங்களில் முளைக்கொட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ராஜபாளையம் அருகேயுள்ள 3 கிராமங்களில் முளைக்கொட்டுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களில் ஆடி மாத பௌா்ணமியையொட்டி முளைக்கொட்டு திருவிழா திங்கள்கிழமை (ஜூலை 31) தொடங்கியது. 5 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி, 3 கிராமங்களில் அமைந்துள்ள ஜெயமாரியம்மன், யோக மாரியம்மன், செல்வ மாரியம்மன், செல்ல மாரியம்மன், சடை மாரியம்மன், ஆகாச மாரியம்மன் கோயில்களில் வேண்டிக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் முளைப்பாரிகளை வளா்த்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊா்வலத்தில ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். சங்கரபாண்டியபுரத்திலிருந்து, சமுசிகாபுரம், சத்திரப்பட்டி நடுத்தெரு, தெற்கு தெரு, ஆலங்குளம் சாலை, நத்தம்பட்டி சாலை உள்ளிட்ட பிரதான வீதிகள் வழியாக முளைப்பாரி ஊா்வலம் சென்ற கிராமத்தினா், துரைமடம் விநாயகா் கோயில் எதிரேயுள்ள கிணற்றில் முளைப்பாரியைக் கரைத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

இந்தத் திருவிழாவுக்காக, மருத்துவத் துணி உற்பத்தி நிலையங்கள், விசைத்தறி கூடங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினா், ஊா்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com