

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்புப் பகுதி பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ராம்கோ குழுமத்தின் பிஏசிஆா் சேதுராமம்மாள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற முகாமில், நீதிபதி இருதயராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது, பழங்குடியின ஜாதிச் சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வனக் காப்பாளா் பெரியசாமியை இடமாற்றம் செய்ய வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.