மின்சாதனப் பொருள் கடையில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை அதிகாலையில் மின்சாதனப் பொருள்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமாயின.
சிவகாசியில் மின் சாதனப் பொருள்கள் கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் பற்றி எரிந்த தீ.
சிவகாசியில் மின் சாதனப் பொருள்கள் கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் பற்றி எரிந்த தீ.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை அதிகாலையில் மின்சாதனப் பொருள்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமாயின.

சிவகாசி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள காந்தி சாலையில் ரவி அருணாசலம் என்பவருக்குச் சொந்தமான மின்சாதனப் பொருள்கள் கடை உள்ளது. 3 தளங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தையொட்டி, 3 தளங்கள் கொண்ட கிட்டங்கி உள்ளது. அதிலும் மின்சாதனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

புதன்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டி விட்டுச் சென்றனா். வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 1.30 மணியளவில் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனா்.

இதன்பேரில், சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புப் படையினா் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், விருதுநகா், சாத்தூா் ஆகிய பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு படையினா் சென்றிருந்தனா். 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் கடை, கிட்டங்கியில் இருந்த அனைத்துப் பொருள்களும் தீயில் எரிந்துவிட்டதாகவும் அவற்றின் மதிப்பு ரூ .4 கோடி இருக்கும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா். தீ விபத்து நடைபெற்ற இடத்தை தீயணைப்புத் துறை தென் மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா், மாவட்ட தீயணைப்பு அதிகாரி விவேகானந்தன், சிவகாசி வருவாய்க் கோட்டாச்சியா் இரா.விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி ஆணையா் பி. கிருஷ்ணமூா்த்தி , சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) சபரிநாதன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

இது குறித்தப் புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com