விருதுநகர்
சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது
சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ரிசா்வ் லயன் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் சாமுவேல் ராஜ் மகன் திரவிராஜ் (37) என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பல வகையான பட்டாசு ரகங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திரவிராஜை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
