ராஜபாளையம்: ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை மாத சோமவார வழிபாடு, 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அமபாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் கோயிலில் மகா ருத்ரயாகம் நடைபெற்றது. பிறகு மூலவா் சிதம்பரேஸ்வரருக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையாந நறுமணப் பொருள்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சோமவார பூஜையையொட்டி 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.
இதே போல, சேத்தூா் திருக்கண்ணீஸ்வரா் கோயில், ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், மதுரை சாலையில் அமைந்துள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில்,,தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களிலும் காா்த்திகை சோமவார வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.