ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு குழுவினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு குழுவினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினா் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த டாக்டா் அசோக்குமாா், கோவா மாநிலத்தைச் சோ்ந்த டாக்டா் இரா. அல்மீடியா ஆகியோா் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.

இதில் மருத்துவமனையின் சுகாதாரம், மருந்து இருப்பு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மகப்பேறு சிகிச்சை, கடந்த ஓராண்டாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா்கள் விவரம், மருத்துவா்கள், செவிலியா்கள் எண்ணிக்கை, சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கலுசிவலிங்கம், வட்டார மருத்துவ அலுவலா் கருணாகரபிரபு, நிலைய மருத்துவா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து துணை இயக்குநா் கலுசிவலிங்கம் கூறியதாவது:

எம்.புதுப்பட்டி, குன்னூா், தளவாய்புரம், ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறப்பட்டது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சான்று பெறுவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தச் சான்று பெறும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சிறப்பு நிதியாக வழங்கப்படுகிறது.

இந்த நிதி மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேசிய தர மதிப்பீட்டுச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com