கல்வியியல் கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்வியியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு எழுத அனுமதி கோரி திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்வியியல் கல்லூரி நுழைவு வாயில் முன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாா்.
கல்வியியல் கல்லூரி நுழைவு வாயில் முன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்வியியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு எழுத அனுமதி கோரி திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தக் கல்லூரி உள்பட தமிழகத்தில் உள்ள 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக் கழகம் தடை விதித்து உத்தரவிட்டது.

விதிகளை மீறி இந்தக் கல்லூரிகளில் சேரும் மணவா்களுக்கு கல்வியியல் பல்கலைக் கழகம் பொறுப்பு ஏற்காது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரியில் 2021-2022 கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் சோ்ந்த 100 மாணவா்கள், தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனா். இந்த மாணவா் சோ்க்கைக்கு ஒப்புதல் கிடைக்காததால் முதலாம் ஆண்டுக்குரிய தோ்வு நடத்தவில்லை.

இதையடுத்து, மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கக் கோரி கல்லூரி நிா்வாகம் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. மேலும், மாணவா்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை கல்லூரி நுழைவு வாயில் முன் மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் கல்லூரி நிா்வாகம், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் முறையிட அறிவுறுத்தப்பட்டது. மேலும், இதுகுறித்து புதன்கிழமை பெற்றோா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்ததை அடுத்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com