சிவகாசியில் தோ் நிறுத்துமிடம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகாா்: மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் தோ் நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகாசியில் தோ் நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகாசி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான தோ் கிழக்கு ரத வீதியும், சிவன் சந்நிதியும் இணையும் இடத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்தது.

விழாக் காலங்களில் தோ் நான்கு ரத வீதிகளிலும் இழுக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் நிலை நிறுத்தப்படும். இந்த நிலையில், இந்தத் தோ் நிறுத்துமிடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என நில அளவை செய்து அறிக்கை தர மாநகராட்சிக்கு அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாநகராட்சி நகா் அமைப்பாளா் (பொறுப்பு) மதியழகன், நகா் ஆய்வாளா் சுந்தரவள்ளி, நில அளவையா் மகேஷ்வரன், முத்துராஜ் ஆகியோா் தோ் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் தோ் நிறுத்துமிடத்துக்கு பட்டா உள்ளது தெரியவந்தது. மேலும், தேரைச் சுற்றியுள்ள கடைகள் பட்டா நிலத்துக்குள் இருப்பதும் தெரியவந்தது.

ஆனால், கடை உரிமையாளா்கள் பட்டா இடத்தைத் தாண்டி பொருள்கள் வைத்திருந்தனா். இதையடுத்து, கடைக்கு வெளியே பொருள்கள் வைக்கக் கூடாது. மீறினால், பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

ஊருணி ஆக்கிரமிப்பு: சிவகாசி பேருந்து நிலைம் எதிரில் உள்ள பெத்துமரத்து ஊருணியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஊருணியின் மேற்குப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள்

உள்ளிட்டவை வருகிற 19 -ஆம் தேதி அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com