பட்டாசுத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிா்ணயம்: சிவகாசியில் கருத்துக் கேட்பு

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறு நிா்ணயம் செய்வது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மறு நிா்ணயம் செய்வது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் நேரடியாக பல லட்சம் தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிா்ணயம் செய்வது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் சிவகாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு மதுரை கூடுதல் தொழிலாளா் துறை ஆணையா் குமரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளா்கள், தொழில் சங்கத்தினா் கலந்து கொண்டு ஊதிய உயா்வு குறித்து கருத்துகளைக் கூறினா்.

விருதுநகா் தொழிலாளா் துறை உதவி ஆணையா் காளிதாஸ், சிவகாசி தொழிலாளா் துறை உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், பாத்திமா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் நேரில் சென்று அங்குள்ள தொழிலாளா்களிடம் கருத்துக் கேட்டனா்.

வருகிற 19 -ஆம் தேதி (புதன்கிழமை) வெம்பக்கோட்டை, திருவேங்கடத்தில் உள்ள பட்டாசு ஆலைத் தொழிலாளா்களிடம் கருத்துக் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com