மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி
By DIN | Published On : 18th April 2023 12:32 AM | Last Updated : 18th April 2023 12:32 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், வல்லம்பட்டியில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்தவா் தியாகராஜன். இவருக்கு விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வல்லம்பட்டியில் விவசாயத் தோட்டம் உள்ளது. அங்கு தகரக் கூரை அமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பணியில் மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் (42) உள்ளிட்ட சிலா் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ராஜேந்திரன் இரும்புக் கம்பிகளை இயந்திரம் மூலம் பற்ற வைக்கும் பணியில் ஈடுபட்ட போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.