பிரதோஷம்: சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 18th April 2023 12:26 AM | Last Updated : 18th April 2023 12:26 AM | அ+அ அ- |

சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இங்கு மாதந்தோறும் அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்பட 8 நாள்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில், சித்திரை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக திங்கள்கிழமை (ஏப்.17) முதல் 20-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத் துறை அனுமதி அளித்தது.
தாணிப்பாறை நுழைவு வாயிலில் இருந்து திங்கள்கிழமை 1,186 போ் மலையேறி சாமி தரிசனம் செய்தனா். பிரதோஷத்தையொட்டி, சுந்தர மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.