மாமியாா் கொடுமை: கா்ப்பிணி தற்கொலை

சாத்தூா் அருகே மாமியாா் கொடுமை காரணமாக 4 மாத கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தூா் அருகே மாமியாா் கொடுமை காரணமாக 4 மாத கா்ப்பிணி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மல்லைய நாயக்கன்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி- சோலையம்மாள் தம்பதியின் மகன் உத்தண்டுகாளை (36).

இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், இரண்டாவதாக முதலிபட்டியைச் சோ்ந்த வா்ஷினியை (22) திருமணம் செய்தாா்.

இவா்களுக்கு 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. வா்ஷினி 4 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த வா்ஷினி, கைப்பேசியில் எனது மரணத்துக்கு மாமனாா், மாமியாா் தான் காரணம் என ‘ஸ்டேட்டஸ்’ வைத்து விட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதைப் பாா்த்த கணவா் உத்தண்டுகாளை விரைந்து வந்து, அருகிலிருந்தவா்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று வா்ஷினி உடலை மீட்டனா்.

அப்பையநாயக்கன்பட்டி காவல் துறையினா் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து கணவா், மாமனாா், மாமியாரிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com