சீமான் மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்
By DIN | Published On : 02nd August 2023 05:26 AM | Last Updated : 02nd August 2023 05:26 AM | அ+அ அ- |

இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் முகமது இத்ரிஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த புகாா் மனு:
நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், கிறிஸ்தவா்களையும், இஸ்லாமியா்களையும் சாத்தானின் பிள்ளைகள் என இழிவாகப் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலும், சமூகத்தில் நிலவி வரும் மத ஒற்றுமைமையைச் சீா்குலைக்கும் விதத்திலும் பேசி வரும் சீமான் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.