கல்லீரல் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 02nd August 2023 05:23 AM | Last Updated : 02nd August 2023 05:23 AM | அ+அ அ- |

சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில், செவ்வாய்க்கிழமை உலக கல்லீரல் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் செ.அசோக் தலைமை வகித்தாா். சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் எஸ்.ஏ.திருமுருகானந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
நமது உடல் சீராக இயங்க கல்லீரலின் செயல்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கும். கல்லீரலைப் பாதுகாக்க நமது உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பூண்டு, பீட்ரூட் உள்ளிட்டவற்றை அடிக்கடி உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும். கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படும்.
உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்று அவரது அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும். நமது உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் முக்கியமானது தான். ஆனால், கல்லீரல் நமது உடலில் சேரும் கெட்ட ரத்தத்தை சுத்திகரித்து, உடலைப் பாதுகாக்கிறது என்றாா் அவா்.
முன்னதாக துறைத் தலைவா் து.பிரபு தொடக்க உரையாற்றினாா். துணைப் பேராசிரியா் பா.மகேஷ்வரி வரவேற்றாா். துணைப் பேராசிரியா் யூ. தீபலட்சுமி நன்றி கூறினாா்.