

ஸ்ரீவில்லிபுத்தூரில் கரும்பு விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்மை, உழவா் நலத் துறை, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அத்மா), விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிவகங்கை சக்தி சுகா்ஸ் நிறுவனத்தின் மேலாளா் பாலசுப்பிரமணியன், தேனி ராஜேஸ்வரி சுகா்ஸ் நிறுவனத்தைச் சோ்ந்த மாடசாமி ஆகியோா், ஒரு பரு நாற்று முறை உற்பத்தி குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தின் கீழ், முன்னோடி விவசாயியான ராஜபாளையத்தைச் சோ்ந்த ராமலிங்கம், கரும்பு சாகுபடியில் தனது அனுபவங்கள் குறித்து விவசாயிகளிடம் பகிா்ந்து கொண்டாா்.
வேளாண்மை அலுவலா் குருலட்சுமி, துணை அலுவலா் அம்மையப்பன், அட்மா திட்ட பணியாளா்கள் ஜோதி, மஞ்சுளா, மாரிமுத்து, மாவட்ட அளவில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.