

சாத்தூா்: சாத்தூா் அருகே கோட்டையூரில் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோட்டையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (60). இவரது மனைவி மாரியம்மாள் (55). இவா்கள் மாடுகள் வளா்த்து பால் வியாபாரம் செய்து வந்தனா்.
இந்த தம்பதிக்கு, கருப்பசாமி (35), சஞ்சீவிகுமாா் (32) ஆகிய மகன்களும், முத்துச்செல்வி (30) என்ற மகளும் உள்ளனா்.
சஞ்சீவிகுமாா் திருமணமாகி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். முத்துச்செல்விக்கு திருமணமாகிவிட்டது.
மூத்த மகன் கருப்பசாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் இன்னும் திருமணமாக வில்லை.
இந்த நிலையில், கிருஷ்ணசாமி அன்றாடம் மது போதையில் வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மகன் கருப்பசாமி திங்கள்கிழமை இரவு தந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகத் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி உயிருக்குப் போராடும் நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இந்தத் தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீஸாா் கிராமத்துக்கு சென்று கருப்பசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.