சாத்தூா் மேலக்காந்தி நகரில் அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் மேலக்காந்தி நகா் பகுதியில் சுமாா் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், நகராட்சி நிா்வாகம் சாா்பில் இந்தப் பகுதிக்கு முறையான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். கழிவுநீா்க் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு
நகரச் செயலா் பழனிக்குமாா் தலைமை வகித்தாா்.
இதையடுத்து நகராட்சி ஆணையா் ஜெகதீஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.