

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் பரப்பளவில் பெரியது ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காட்டாறுகள், நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து, மம்சாபுரம் வாழைகுளம் கண்மாயும், மலையடிவாரத்தில் உள்ள வேப்பங்குளம் கண்மாயும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
இந்தக் கண்மாய்களிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்ததால், சனிக்கிழமை அதிகாலையில் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.